வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி : இன்றும் மழை பெய்யும் சாத்தியம்
Sri Lanka
Department of Meteorology
Weather
By Beulah
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போது இலங்கையின் தெற்காக மையம் கொண்டுள்ளது.
இது மாலைதீவு கடற் பிராந்தியம் நோக்கி மேற்கு திசையில் நகர்வதன் காரணத்தினால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை
இதேவேளை, நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை, மொனராகலை, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்