விண்வெளியில் முளைக்க தொடங்கிய பயறு விதைகள்!

India World ISRO
By Raghav Jan 05, 2025 02:35 PM GMT
Report

பிஎஸ் 4 இயந்திரத்தில் கிராப்ஸ் ஆய்வுக் கருவியில் வைக்கப்பட்டிருந்த காராமணி பயறு விதைகள் வெற்றிகரமாக முளைக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ (ISRO) தெரிவித்துள்ளது.

எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் முதல்கட்ட விண்கலங்கள் 2028-ல் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.

கோர முகத்தை காட்டிய இஸ்ரேல் : அசந்த நேரத்தில் புகுந்த ரொக்கெட்டுகள்

கோர முகத்தை காட்டிய இஸ்ரேல் : அசந்த நேரத்தில் புகுந்த ரொக்கெட்டுகள்

விண்கலன்

இதையடுத்து, ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ரொக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30-ம் திகதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

விண்வெளியில் முளைக்க தொடங்கிய பயறு விதைகள்! | Black Gram Seeds Have Started Sprouting In Space

தற்போது இவ்விரு விண்கலன்களும் ஒரே சுற்றுப்பாதையில் 20 கிமீ இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வருகின்றன.

தொடர்ந்து இவற்றின் தூரம் படிபடியாக குறைக்கப்பட்டு ஜனவரி 7-ம் திகதி விண்கலன்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இந்நிலையில் விண்வெளியில் வலம்வரும் ஸ்பேடெக்ஸ் பி விண்கலன் தனது கேமரா மூலம் எடுத்துக்கொண்ட செல்பி வீடியோவை இஸ்ரோ நேற்று (04.01.2025) வெளியிட்டது.

நடு ஊரில் விழுந்த மர்ம பொருள் : வெளிநாடொன்றில் பரபரப்பு

நடு ஊரில் விழுந்த மர்ம பொருள் : வெளிநாடொன்றில் பரபரப்பு

காராமணி பயறு

இதற்கிடையே, பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ் 4 இயந்திரத்தில் போயம் (POEM-PSLV Orbital Experimental Module) எனும் பரிசோதனை முயற்சிக்காக 24 ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

விண்வெளியில் முளைக்க தொடங்கிய பயறு விதைகள்! | Black Gram Seeds Have Started Sprouting In Space

இவை புவியை வலம் வந்தபடி அடுத்த சில மாதங்களுக்கு செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை விண்வெளியில் முன்னெடுக்க இருக்கின்றன.

அவற்றில் இஸ்ரோ வடிவமைத்த ரோபோட்டிக் ஆர்ம் (Debris Capture Robotic Arm), கிராப்ஸ் (CROPS-Compact Research Module for Orbital Plant Studies) ஆகிய ஆய்வுக் கருவிகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறும்போது, ‘‘விண்வெளி சூழலில் தாவரம் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட கிராப்ஸ் கருவியில் வைக்கப்பட்ட காராமணி பயறு(cowpea) விதைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.

தொடர்ந்து அவை வளர ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எஞ்சியுள்ள கருவிகளும் தனது ஆய்வை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன’’ என தெரிவித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் இலங்கையருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை

வெளிநாடொன்றில் இலங்கையருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை

அமெரிக்க வரலாற்றில் மோசமான ஜனாதிபதி : பைடனை கடுமையாக விமர்சித்துள்ள ட்ரம்ப்

அமெரிக்க வரலாற்றில் மோசமான ஜனாதிபதி : பைடனை கடுமையாக விமர்சித்துள்ள ட்ரம்ப்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026