கிங்ஸ்பரி ஹோட்டல் விவகாரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சரத் வீரசேகர
கொழும்பில் உள்ள கிங்ஸ்பரி ஹோட்டல் நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிசிடிவி கருவியின் காட்சிகளைத் திரித்து, "ஜனாதிபதி படுகொலை சதி" எனக் குறிப்பிடும் தவறான முத்திரைகளுடன் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரப்பப்பட்டதன் மூலம் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒக்டோபர் 24 அன்று குறித்தஹோட்டலுக்குச் சென்றதாக சட்ட ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.
திருத்தப்பட்ட காணொளி
கடுமையான கண்காணிப்பில் இருக்க வேண்டிய தங்களது சிசிடிவி அமைப்பின் பதிவுகளை ஹோட்டல் நிர்வாகம் திரித்து, குறிப்பிட்ட சில சமூக ஊடக செல்வாக்குள்ளவர்களுடன் கூட்டுச் சேர்ந்து பகிர்ந்துள்ளதாக சரத் வீரசேகரவால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட அந்தக் காணொளியில் , வீரசேகரவும் ஒரு பௌத்தத் துறவியும் ஒரே நேரத்தில் ஒரு ஹோட்டல் அறைக்குள் நுழைவது போலக் காட்டப்பட்டுள்ளது.
இந்தச் சித்தரிப்பு முற்றிலும் தவறாக வழிநடத்துவதாகவும், பொதுமக்களுக்கு ஒரு தவறான கதையை உணர்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் அவரது ஈடுபாடு குறித்துப் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அத்தகைய வகைப்படுத்தப்பட்ட காணொளிகளை, உரிய அனுமதிகள் இல்லாமல் பகிர்வது ஹோட்டலின் தனியுரிமைக் கொள்கையை மீறுவதாகும் என்று சட்ட அவரது ஆலோசகர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மீறல் , வாடிக்கையாளரின் தனியுரிமையைப் பெரிதும் பாதிப்பதோடு , அவரைக் கடுமையான இணையவழித் துன்புறுத்தலுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாக்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |