மீட்பின் போது உயிரிழந்த விமானிக்கு பதவி உயர்வு
ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அவரது சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் விதமாக, 2025 நவம்பர் 30 முதல் விங் கொமாண்டர் பதவி நிலையிலிருந்து குரூப் கேப்டன் பதவி நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டரின் தலைமை விமானியான லுனுவில பகுதியில் விமானத்தை அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
சீரற்ற வானிலை
சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இறுதிச் சடங்குகள்
அவரது உடல் இன்று லுனுவில இல்லத்தில் அடக்கம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 2025 டிசம்பர் 02, மாலையில் இரத்மலானை இல்லத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

அவரது இறுதிச் சடங்குகள் விமானப்படையின் முழு மரியாதையுடன் எதிர்வரும் 2025 டிசம்பர் 04ஆம் திகதி நடைபெறும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |