சிறிலங்கன் எயார் லைன்ஸிலிருந்து விலகும் தொழில்நுட்ப வல்லுனர்கள்
கடந்த இரண்டு வருடங்களில் சிறி லங்கன் எயார்லைன்ஸின் சுமார் 160 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
தற்போது 250 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே அங்கு பணிபுரிவதாக அதன் விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
415 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் சேவையில்
சிறிலங்கன் எயார்லைன்ஸின் தகவலின்படி, 415 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் சேவையில் இருக்க வேண்டும், விமானத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளிநாட்டு முக்கிய விமான நிறுவனங்களில் அதிக தேவை இருப்பதால் வேலையிலிருந்து விலகி செல்வதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
வெளிநாட்டு விமான நிறுவனங்களில் அதிகரித்த சம்பளம்
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் 70,000 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் விமான தொழில்நுட்ப வல்லுநர் பணிபுரிய முடியும் எனவும், அதிகபட்ச சம்பளம் ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் ரூபா வரை பெற முடியும் எனவும் சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள் விமான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 10 இலட்சம் ரூபா உயர் சம்பளம் வழங்க தயாராக இருப்பதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |