வீட்டுப் பாவனைப் பொருட்கள் இறக்குமதிக்கு தடையா? அரசாங்கம் விளக்கம்
colombo
government
ajith nivard cabraal
srilaka
import
By S P Thas
தற்போது தடை செய்யப்பட்ட பொருட்களைத் தவிர வேறு பொருட்கள் மீதான இறக்குமதியை நிறுத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
இலங்கை மத்திய வங்கி அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை நிறுத்தி வைக்க முன்மொழிந்துள்ளது.
இதேவேளை, தற்போதைய நிலைமையை நிர்வகிக்க வேறு வழிகள் உள்ளன. அந்த தந்திரோபாயத்தை பயன்படுத்த அரசாங்கம் விரும்புகிறது.
தற்போது இறக்குமதி செய்யப்படும் வீட்டுப் பாவனை பொருட்களை தடை செய்யவுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், அது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி