ஒருபோதும் எமது இலக்கை மறந்துவிடக்கூடாது! இராஜாங்க அமைச்சர்

srilanka colombo economic ajith nivard cabraal
By S P Thas Jun 07, 2021 08:35 AM GMT
Report

தற்போதைய சூழலில் சவால்களை ஒருபுறம் எதிர்கொள்ளும் அதேவேளை, மறுபுறம் ஏனைய துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தியுள்ளோம் என்று நிதி, மூலதனச்சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலீட்டு மாநாடு இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இணையவழியின் ஊடாக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

முதலீட்டை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பொருத்தமான நேரம் இதுவல்ல என்று சிலர் கூறுகின்றார்கள். பெரும்பாலான உலகநாடுகள் முடக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், சுற்றுலாத்துறை போன்ற முக்கிய துறைகள் இயங்கமுடியாத தருணத்தில், இவ்வனைத்திற்கும் எப்போது தீர்வு காணப்படும் என்று இன்னமும் தெரியாத நிலையில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு முதலீட்டாளர்களிடம் எவ்வாறு கோரமுடியும் என்று வினவுகின்றார்கள்.

எனவே தற்போதைய நெருக்கடிமிக்க வேளையில் முதலீடுகள் தொடர்பில் பேசுவது சரியா? என்ற கேள்வி எழுகின்றது. நாடொன்றில் முதலீடுகளைச் செய்யும்போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் முதலீட்டாளர்கள் பிரத்தியேமாக அவதானம் செலுத்தவேண்டும். அவை தொடர்பில் கலந்துரையாடக்கூடிய களமாகவே இந்த மாநாடு அமையும். இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி என்பது 2006 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

போர் இடம்பெற்றுவந்த காலப்பகுதியில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவேண்டியதன் அவசியம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது சமாதானத்திற்குத் தயாராவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவேதான் போர் முடிவிற்குக்கொண்டுவரப்படுவதற்கு முன்னரான காலப்பகுதியிலேயே அம்பாந்தோட்டைத்துறைமுகம், நுரைச்சோலை அனல்மின்னுற்பத்தி நிலையம், அதிவேக நெடுஞ்சாலைகள், விமானநிலையங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

அதனால்தான் போர் முடிவடைந்ததன் பின்னர் மிகவேகமாக வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கக்கூடிய அடித்தளம் இலங்கையிடம் காணப்பட்டது. அதனாலேயே இலங்கையினால் 8 சதவீத பொருளாதார வளர்ச்சியினையும் அடைந்துகொள்ள முடிந்தது. இவை எவையும் சடுதியான இடம்பெற்ற மாற்றங்கள் அல்ல. மாறாகப் படிப்படியாகத் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் கிடைக்கப்பெற்ற அடைவுகளாகும்.

2014 ஆம் ஆண்டில் இலங்கையின் மூலதனச்சந்தைப் பெறுமதி 24.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. எனினும் 2021 ஆம் ஆண்டில் அதன் பெறுமதி 14.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமேயாகும்.

ஆகவே 7 வருடகாலத்திற்குள் இதில் சடுதியான வீழ்ச்சியொன்று ஏற்பட்டுள்ளது. எனினும் இதன்மூலம் பங்குப்பரிவர்த்தனையுடன் தொடர்புடைய கம்பனிகளுக்குப் பாரிய இயலுமையும் வாய்ப்பும் காணப்படுகின்றமை வெளிப்பட்டுள்ளது.

தற்போது முதலீடு செய்யக்கூடிய கம்பனிகளினால் பெருமளவான இலாபத்தை ஈட்டிக்கொள்ள முடியும். கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலை மற்றும் சவால்களின் காரணமாக நாம் ஒருபோதும் எமது இலக்கை மறந்துவிடக்கூடாது என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025