ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் (Presidential Election) தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்று (06) தேர்தல்கள் ஆணைக்குழுவில் (Election Commision) குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 15ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
கட்டுப்பணம் செலுத்திய 18 வேட்பாளர்கள்
நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் வேலைத்திட்டத்துடன் கூடிய அரசியலை வெல்வதே தமது கட்சியின் நோக்கமாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேர்தல் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், நாட்டின் தலைமைக்கு தெளிவான அரசியல் தலைவரை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், மக்கள் தற்போது நாட்டை அனுரவிற்கு கையளிப்பதற்கு தயாராக உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa), பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka), விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) உள்ளிட்ட 18 வேட்பாளர்கள் இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |