சிறிலங்கா நாடாளுமன்ற கொவிட் கொத்தணி மேலும் அதிகரித்தது
covid
anurathapura
slpp
Akila Ellawala
By Sumithiran
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
நேற்று (18) நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தற்போது மருத்துவ பரிந்துரைகளின் பேரில் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதத்தில், 15க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது.
அதேவேளை கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்