அட்சய திருதியை அன்று கட்டாயம் செய்ய வேண்டியவை இதுதான்..!
சித்திரை மாதத்தில் வரும் முதல் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை தான் அட்சயதிருதியை என்று கூறுவார்கள்.
அட்சயம் என்றால் குறையாது, திருதியை என்றால் புண்ணியத்தைப் பெறுவது என்று பொருள்படும்.
அந்தவகையில், இந்த ஆண்டு மே 10ம்திகதி காலை 4.17 மணிக்கு திரிதியை திகதி தொடங்குகிறது.மே 11ஆம் திகதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும்.
அட்சய திருதியை நாளில் என்ன செய்ய வேண்டும்.
அட்சய திருதியை நாளில் சில விஷயங்களை செய்வதால் வீட்டில் செல்வ செழிப்பு பெருகும் என்பது ஐதீகம். அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜையறையில் கோலம் இட்டு அதன்மேல் கும்பம் வைக்க வேண்டும்.
கும்பத்தின் அருகில் நெல் ஒரு பிடி வைக்க வேண்டும். பூ மற்றும் லட்சுமி நாராயணர் படம் வைத்து வழிப்படுதல் நல்லது. கோவிலுக்குச் செல்வதும் சிறந்த ஒன்றாகும்.
பின் வீட்டில் வழிப்படும் வேளையில் பிள்ளையாரை வணங்கி துதிகளைப் பிராத்திக்க வேண்டும்.
அட்சய திருதியை அன்று உணவு உண்ணாமல் விரதம் இருந்து, அல்லது அவரவர் உடல் நலத்திற்கு ஏற்ப விரதம் இருக்கலாம்.விரதம் இருத்தல் கட்டாயம் இல்லை.
அட்சய திருதியை
மேலும் அட்சய திருதியை வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் செய்வதற்கும் சிறந்த நாளாக பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு தானம் செய்வதால், நமக்கு மட்டுமல்ல, நம் வருங்கால சந்ததியினருக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அந்தவகையில், அந்நாளில் தண்ணீரை தானமாக வழங்கினால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதோடு, ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு தண்ணீர் கொடுத்து தாகம் போக்கினால் இறையருளை பெறலாம்.
தானம் செய்தல்
அட்சய திருதியை அன்று கணவர் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என விரும்பும் மனைவிகள் குங்குமத்தை தானமாக வழங்கலாம்.
மேலும், வெல்லம், நெய் மற்றும் உப்பு ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுத்தால் கிட்டும் என நம்பப்படுகின்றது.
அந்நாளில், ஏழை எளியோருக்கு புத்தாடைகள் தானமாக கொடுத்தால் இறைவனின் ஆசியை பெறலாம் என்பதோடு, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், சந்தனத்தை தானம் செய்வதால், செல்வ செழிப்பையும், ஆரோக்கியமான வாழ்வையும் பெறலாம் என்பது ஐதீகம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |