மீண்டும் சிக்கலில் உயர்தர விடைத்தாள் மதிப்பீடு
உயர்தர விடைத்தாள் பரீட்சை மதிப்பீட்டுக்கான பணத்தை பெறுவதில் சந்தேகம் நிலவுவதாகவும், பரீட்சார்த்திகள் நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொண்டால் அதற்கு பரீட்சைகள் திணைக்களம் பொறுப்பேற்க வேண்டுமென அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வல பன்னசேகர தெரிவித்துள்ளார்.
முன்னர் கூறியது போன்று அனைத்து மதிப்பீட்டு நிலையங்களுக்கும் முற்கொடுப்பனவை உடனடியாக செலுத்துமாறு கோரியுள்ளதாகவும், இது தொடர்பில் பரீட்சை திணைக்களம் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கூறினார்.
இதுவரை வழங்கப்படாத தொகை
500 ரூபா கொடுப்பனவை 3000 ரூபாவாக அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் 2000 ரூபாவே அங்கீகரிக்கப்பட்டதாக யல்வல பன்னசேகர பிரபு தெரிவித்தார்.
முற்பணமாக 15,000 ரூபா கொடுப்பதாக உறுதியளித்த போதிலும் அதற்கான தொகை வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
