வடக்கு பரீட்சை நிலையங்களில் இருந்து மீள பெறப்பட்ட உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள்
வடக்கில் உள்ள பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த 2024 உயர்தரப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் இலங்கை விமானப்படையினரால் மீள கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உலங்குவானூர்தி மூலம் இன்று (29) குறித்த வினாத்தாள்கள் மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக 2024 உயர்தரப் பரீட்சை ஆறு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், வினாத்தாள்கள் கல்வி அமைச்சுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வடமாகாண கல்வி அமைச்சு
இதன்போது, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி, வட மாகாணத்தின் நெடுந்தீவு, வேலனை, நயினாதீவு ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட பரீட்சை நிலையங்களில் இருந்து வினாத்தாள்களை மீண்டும் வடமாகாண கல்வி அமைச்சுக்கு கொண்டு சென்றுள்ளது.

மேலும், சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        