உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு
Ministry of Education
Sri Lankan Peoples
G.C.E.(A/L) Examination
By Kiruththikan
பெறுபேறுகள்
கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி வௌியிட தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும், கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக செயன்முறை பரீட்சைகளில் தோற்றுவதற்கான திகதி பிற்போடபட்டமையால், பெறுபேறுகளை இறுதி செய்வது தாமதமாகியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் மாதம் நிறைவடைவதற்கு முன்னர் பெறுபேறுகள்
இந்நிலையில் அடுத்த வாரமளவில் செயன்முறை பரீட்சைகள் நிறைவு செய்யப்படும் எனவும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைவதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்படும் எனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி