உயர்தர பரீட்சை : பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
உயர்தர பரீட்சை வெளியான நிலையில் மீள் மதிப்பீடுகளுக்காக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி இன்று (07) முதல் இதற்காக விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்றுமுதல் தொடங்கி எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீள் மதிப்பீடுகளுக்காக விண்ணப்பிக்க முடியும்.
பரீட்சைகள் திணைக்களம்
பரீட்சைகள் திணைக்களத்திற்கு சொந்தமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கு மீண்டும் தோற்றவுள்ள
இதேவேளை, இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு மீண்டும் தோற்றவுள்ள கடந்த பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு மாத்திரம் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
