பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Vanan
எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவுடன் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள்,கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவதற்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இது தொடர்பான அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து அரச - அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்