இந்திய சினிமா பாடல்களுக்கு விதிக்கப்பட்ட அதிரடி தடை
பாகிஸ்தான் (Pakistan) முழுவதும் உள்ள வானொலி நிலையங்களில் இந்திய (India) பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்து பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி அன்று, ஜம்மு காஷ்மீரின் (Kashmir) பகல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதன்பிறகு, இந்திய தரப்பு பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிநீர் உடன்படிக்கையை இடை நிறுத்தம் செய்ததுடன், அட்டாரி எல்லையை மூடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
இந்தியா - பாகிஸ்தான் பதற்றம்
மறுபுறம், சிம்லா ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான முடிவு உட்பட இந்தியாவுக்கு எதிரான பல முடிவுகளை பாகிஸ்தானும் அறிவித்தது.
மேலும், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் பதற்றம் எந்த நேரத்திலும் ஒரு பெரிய போரா வெடிக்கலாம்.
இந்தப் பதற்றம் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் பாகிஸ்தானின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக மட்டுமல்லாமல், ஏற்கனவே போர் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும் உலகின் பல பகுதியின் பாதுகாப்பிற்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.
இந்நிலையில், பாகிஸ்தான் முழுவதும் உள்ள வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
வானொலி நிலையம்
பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தினால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசின் தகவல் தொடர்புத்துறை மந்திரி அட்டாவுல்லா தரார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதிக்கும் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவு வரவேற்கத்தது.
இந்த தேசபக்திமிக்க செயல் நாட்டின் ஒற்றுமை உணர்வை பிரதிபலிக்கிறது. நாட்டின் கண்ணியத்தையும், இறையாண்மையையும் நிலைநிறுத்தும் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் முயற்சியை பாராட்டுகிறோம்.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
