பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்தியா
இந்தியாவிற்கும் (India) , பாகிஸ்தானுக்கும் (Pakistan) இடையே நடந்து வரும் பதற்றம் எந்த நேரத்திலும் ஒரு பெரிய போரா வெடிக்கலாம்.
இந்தப் பதற்றம் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் பாகிஸ்தானின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக மட்டுமல்லாமல், ஏற்கனவே போர் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும் உலகின் பல பகுதியின் பாதுகாப்பிற்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.
காசா போரும், ஈரானுடனான அமெரிக்க - இஸ்ரேலின் பதற்றமும் ஏற்கனவே அரபு நாடுகளுக்கு கவலைகளை எழுப்பியுள்ளன.
இந்நிலையி, போரில் பாகிஸ்தானின் முழு ஈடுபாடு, அரபு நாடுகளின் பாதுகாப்பிற்கு ஒரு சவாலாக மாறும். இதற்கு மிகப்பெரிய காரணம், பாகிஸ்தான் அரபு நாடுகளின் இராணுவ நட்பு நாடு என்பது தான்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் உச்சத்தில் உள்ளது. சர்வதேச சமூகம் இதைப் பற்றி கவலை கொண்டுள்ளது.
பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே போர் ஏற்பட்டால், அதிகபட்ச எண்ணிக்கையிலான பொதுமக்கள் இறக்க நேரிடும் என்று போர் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை வரலாற்றில் மிக அதிகமாகவும் இருக்கலாம். ஏனென்றால் இந்த நாடுகள் உலகின் மிக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாக உள்ளன.
இந்த நிலையில், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் போர் வெடிக்குமாக இருந்தால் இலங்கை எந்த நாட்டிற்கு துணையாக இருக்கும் என்கின்ற ஒரு கேள்வி வரும்.
இலங்கையை பொருத்தமட்டில் இந்தியாவுடன் நல்ல ஒரு நட்புறவில் உள்ளது. அதேபோல் தான் பாகிஸ்தானுடனும் பொருளாதர அடிப்படையில் நட்பு கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தில் மதில் மேல் பூனைப்போலவே தான் இருக்குமா ? அல்லது இந்த விவகாரத்தில் எவ்வாறு செயற்படும் என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது இன்றைய “ஐபிசி தமிழின் அதிர்வு”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
