பகலில் பத்திரிகையாளர், இரவில் ஹமாஸ் தளபதி:ஆதாரங்களை வெளியிட்டது இஸ்ரேல்
அல் ஜசீரா ஊடகத்தின் ஊடகவியலாளராக பணிபுரியும் முகமது விஷா என்பவர் ஹமாஸ் அமைப்பின் தளபதியாக பணியாற்றியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவில் கைப்பற்றப்பட்ட மடிக்கணினியில் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள், இதனை உணர்த்துவதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
தாங்கி எதிர்ப்பு பிரிவு தளபதி
இதன்படி மொகமட் விஷா கடந்த 2022 வரை ஹமாஸ் அமைப்பில் தாங்கி எதிர்ப்பு ஏவுகணை பிரிவில் தளபதியாக இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவத்தின் அரபு ஊடகத்தின் செய்தித் தொடர்பாளர் அவிச்சாய் அட்ரே ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
#عاجل #خاص في الصباح صحفي في قناة #الجزيرة وفي المساء مخرب في حماس! @AJArabic
— افيخاي ادرعي (@AvichayAdraee) February 11, 2024
⭕️خلال نشاط لقواتنا قبل عدة أسابيع داخل احدى معسكرات حماس في شمال قطاع غزة تم ضبط كمبيوتر متحرك يعود إلى المدعو محمد سمير محمد وشاح من مواليد 1986 من البريج حيث يتضح من المستندات ان محمد وشاح هو قائد… pic.twitter.com/s8CX1kOfvP
"காலை அல்ஜசீராவில் ஒரு பத்திரிகையாளர், மாலையில் ஹமாஸில் ஒரு பயங்கரவாதி!" என அவர் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |