போராட்டத்தால் பற்றி எரியும் ஈரான்..! ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்
ஈரானுடன் வர்த்தக உறவுகளைப் பேணி வரும் நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
இந்த புதிய வரி விதிப்பானது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஈரான் போராட்டக்காரர்களைக் கொலை செய்தால், தான் இராணுவ ரீதியாக தலையிடப் போவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தனது ட்ருத் சமூக வலைத்தள கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வீதிகளில் இறங்கி போராட்டம்
ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் திகதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 16 நாட்களாக நீடித்து வருகிறது.
ஈரானில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் வரை பலியானதாக அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சு
இந்நிலையில், ஈரானில் நடக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் அந்நாட்டு தலைவர்கள் தன்னிடம் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் உயர் தலைவர் அயதுல்லா கமேனி தலைமையிலான அரசு, அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையின்றி அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
இது தொடர்ந்தால் அந்த பேச்சுக்கு முன்பாகவே அமெரிக்க இராணுவம் செயலில் இறங்க வேண்டியிருக்கும்.
ஈரானின் தற்போதைய சூழலை அமெரிக்க இராணுவம் மிகத் தீவிரமாக கண்காணித்து வருகின்றது. அங்குள்ள நிலைமை குறித்து ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு தகவல் வந்து கொண்டே இருக்கின்றது.
ஈரான் அல்லது அதன் ஆதரவு நாடுகள் ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டால் இதற்கு முன் அவர்கள் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையான தாக்குதலை அவர்கள் எதிர்கொள்வர்” என அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |