சவுதியில் சாதித்த ரொனால்டோ கிண்ணத்தை கைப்பற்றியது அல் நஸர்

Cristiano Ronaldo Saudi Arabia Portugal
By Sumithiran Aug 12, 2023 10:50 PM GMT
Report

சவுதி உதைபந்தாட்ட கழகமான அல் நஸர் கோடிக்கணக்கில் வாங்கிய போரத்துக்கல் வீரர் ரொனால்டோவின் அசத்தலான கோல் மூலம் அந்த அணி கிண்ணத்தை கைப்பற்றி வாகை சூடியது.

இதன்படி அரபு கிளப் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் பஹத் சர்வதேச மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நஸர் அணி(Al Nassr), அல் ஹிலால்(Al Hilal) அணி இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டம் ஆரம்பித்த முதலே விளையாட்டில் பரபரப்பு

சவுதியில் சாதித்த ரொனால்டோ கிண்ணத்தை கைப்பற்றியது அல் நஸர் | Al Nasser Captures The Trophy Achieved By Ronaldo

ஆட்டம் ஆரம்பித்த முதலே விளையாட்டில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இரு அணிவீரர்களும் கடுமையாக முயன்றும் கோல் அடிக்க முடியாததால் முதல் பாதி ஆட்டம் கோல்கள் எதுவும் பெறப்படாமல் நிறைவுக்கு வந்தது.

எனினும் இடைவேளைக்கு பின்னரான ஆட்டம் சூடு பிடித்தது. இரு அணிவீரர்களும் கோல் போடுவதில் குறியாக இருந்தனர். இந்நிலையில் அல் ஹிலால் அணி வீரர் மைக்கேல், போட்டியின் முதல் கோலை 51 வது நிமிடத்தில் மிகவும் லாவகமாக அடித்து பார்வையாளர்களை விரல் நுனிக்கு கொண்டு சென்றார்.

இதையடுத்து பதிலடிக்கு அல் நஸர் அணி கடுமையாக போராடியது. எனினும் இந்த போராட்டத்திற்கு தக்க பலன் கிடைத்தது. இறுதியில் ஆட்டத்தின் 74 ஆவது நிமிடத்தில் அல் நஸர் அணித் தலைவர் மற்றும் நம்பிக்கை நட்சத்திரமான ரொனால்டோ கோல் ஒன்றை அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தார்.

இறுதியில் சாதித்த ரொனால்டோ

சவுதியில் சாதித்த ரொனால்டோ கிண்ணத்தை கைப்பற்றியது அல் நஸர் | Al Nasser Captures The Trophy Achieved By Ronaldo

ஆனால் மீண்டும் பரபரப்பான ஆட்டத்தில் இறுதி நேரம் வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.எனவே கூடுதல் நேரமாக 30 நிமிடம் ஆட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதனையடுத்து ஆட்டத்தின் 98ஆவது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்து அல் நஸர் அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

ரொனால்டோ அடித்த கோலுக்கு பதிலடி கொடுக்க இறுதிவரை முயன்றும் அல் ஹிலால் அணியால் முடியவே இல்லை. இதனால் 2023 ஆம் ஆண்டுக்கான அரபு கிளப் சாம்பியன்ஷிப் தொடரின் வெற்றிக் கிண்ணத்தை அல் நஸர் அணி தட்டிச் சென்றுள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நஸர் கிளப் அணியில் சேர்ந்த பின்னர் அந்த அணி வெல்லும் முதல் கிண்ணம் இதுவாகும். அத்துடன் அல் ஹிலால் அணியை கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பருக்கு பிறகு அல் நஸர் அணி முதல் முறையாக வீழ்த்தி இருப்பதுடன், அரபு கிளப் சாம்பியன்ஷிப் கிண்ணத்தையும் அல் நஸர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025