சுமந்திரன் அதிரடி : தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்
இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட கிளையின் அங்கத்தவரான சந்தியோ அலன்டீலன் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரினால் வெளியிடப்பட்டள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் சம்மந்தமான விடயத்தில் நீங்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளீர்கள்.
இலங்கை தமிழரசுக் கட்சி
இந்த குற்றச்சாட்டுக்கள் மிகவும் மோசமானதொன்று. ஆகையால் நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரை கட்சி உறுப்புரிமையில் இருந்து தாங்கள் உடனடியாக இடைநிறுத்தப்படுகிறீர்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் சந்தியோ அன்டீலன் அண்மையில் கைது செய்யப்பட்டார்
இதனடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் அங்கத்தவரான அலன்டீலனை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

