அலி சப்ரி - அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு
அவுஸ்திரேலிய நிறுவனங்களின் முதலீடு
இலங்கையில் அவுஸ்திரேலிய நிறுவனங்களின் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸிடம் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்நாட்டு சவால்களை எதிர்கொள்வதற்காக அண்மையில் அவுஸ்திரேலியாவினால் வழங்கப்பட்ட உடனடியான மனிதாபிமான உதவிகளுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள்
வலுசக்தி மற்றும் கல்வித்துறையில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்த சந்திப்பின்போது அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அதேநேரம், பல்தரப்பு மட்டத்தில் பரஸ்பர நலன்கள் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.