பலதார மணசட்டம் - அலி சப்ரியின் திருத்தங்கள் அமைச்சரவையில் தூக்கி எறியப்பட்டன
இஸ்லாத்தில் நிலவும் பலதார மணம் தொடர்பான நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பலதார மணச் சட்டத்தில் திருத்தம் செய்ய நீதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் நீதியமைச்சர் அலி சப்ரியிடம் சிங்கள ஊடகம் ஒன்று வினவிய போது,
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு பலதார மணம் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சில முஸ்லிம்கள் உரிய பொருளாதார நிலைமைகளை பூர்த்தி செய்யாமல் பலதார மணம் காரணமாக பல சமூக பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள சில முஸ்லிம்கள் முறையான வருமானம், இருப்பிடம், சொத்துக்கள் இன்றி பல திருமணங்களைச் செய்து கொள்வதால், குறிப்பாக முஸ்லிம் பெண்கள் கடுமையான பொருளாதார மற்றும் உளவியல் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார்.
எனவே, பலதார மணச் சட்டத்தில் திருத்தம் செய்து இரு தரப்பினருக்கும் நீதி கிடைக்குமாறு கோரி அமைச்சரவைக்கு இந்த பத்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஆணோ பெண்ணோ சொத்தை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளன.
