ஏழு வெளிநாட்டு பயணங்களுக்கு 50 மில்லியனை செலவிட்ட அலிசப்ரி -அம்பலமான தகவலால் அமைச்சர் கொதிப்பு
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஏழு வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ. 50 மில்லியனை செலவிட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளார்.
ட்விட்டரில், அமைச்சர் சப்ரி இந்த அறிக்கைகளை கடுமையாக சாடினார், அவை "முற்றிலும் தவறான மற்றும் போலியான தகவல்கள்" என்று குறிப்பிட்டார்.
அமைச்சர் கொதிப்பு
Absolutely misleading and false information.
— M U M Ali Sabry (@alisabrypc) June 18, 2023
This is the total cost of 5 national delegations to UNGA, UN HRC(2) , IORA , ASEAN ARF
Two bilateral visits to US and Saudi Arabia.
I led the delegation , apart from me 22 other officials have taken part in these deliberations. https://t.co/dH4ENhZ0pW
குறிப்பிட்ட தொகையானது 5 தேசிய பிரதிநிதிகளின் மொத்த செலவாகும் என அமைச்சர் தெளிவுபடுத்தினார். ஐ.நா. பொதுச் சபை (UNGA), ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC), இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கம் (IORA), தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ASEAN) மற்றும் ASEAN பிராந்திய மன்றம் (ARF) ஆகியவற்றுக்கான பிரதிநிதிகள் குழுக்களின் மொத்த செலவு என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கான இரண்டு இருதரப்பு விஜயங்களும் மேற்படி செலவில் உள்ளடங்கிய வெளிநாட்டு பயணங்களில் அடங்கும் என்றும் அமைச்சர் அலி சப்ரி கூறினார்.
“நான் தூதுக்குழுவை வழிநடத்தினேன். என்னைத் தவிர மேலும் 22 அதிகாரிகள் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளனர்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளரின் தகவல்
It has been revealed that the @alisabrypc, has spent more than 5 crore rupees on official trips abroad.
— Parthiban Shanmuganathan (@thisisparthiban) June 17, 2023
These facts have been revealed through an application submitted by @RifthiAli under the RTI Act.
It is stated that the Minister has spent dis amount only for 7 trips. #Monara pic.twitter.com/aJu0NOLKWM
அமைச்சர் அலி சப்ரி உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்காக 5 கோடி ரூபாவுக்கு மேல் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்ததை அடுத்து வெளிவிவகார அமைச்சர் இந்த விளக்கத்தை வழங்கினார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இலங்கையைச் சேர்ந்த சக ஊடகவியலாளர் ஒருவர் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மூலம் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளதாக அந்த ஊடகவியலாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அலி சப்ரி மேற்படி தொகையை 7 வெளிநாட்டு பயணங்களுக்காக மட்டுமே செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதாக அந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
