இலங்கை வெளிவிவகார அமைச்சரை சந்தித்த அமெரிக்க பிரதிநிதிகள்!
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சர்வதேச சூழலியல் விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க பதில் உதவி செயலர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் (Jennifer Littlejohn ) மற்றும் இலங்கைக்கான (Sri Lanka) அமெரிக்க (USA) தூதுவர் ஆகியோர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளனர்.
குறித்தச் சந்திப்பானது இன்று (21) இடம்பெற்றுள்ளது.
அந்தவகையில், நேற்று முன்தினம் (19) இலங்கைக்கு வருகை தந்த லிட்டில் ஜோன் இலங்கையில் உள்ள அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவிருந்தார்.
காலநிலை மாற்றம்
இந்த நிலையில், இன்று இடம்பெற்ற சந்திப்பில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்தல், மற்றும கூட்டான்மையை உறுதி செய்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளார்.
Had a productive meeting with the U.S. Acting Assistant Secretary for Oceans and International Environmental and Scientific Affairs Jennifer Littlejohn today. Discussed further measures to consolidate the partnership including in mitigating the adverse impacts of climate change… pic.twitter.com/IlWR0oz1hJ
— M U M Ali Sabry (@alisabrypc) August 21, 2024
மேலும், இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து 21 - 28 ஆம் திகதி வரை இந்தியாவுக்கும் (India), 28 - 30 ஆம் திகதி வரை மாலைதீவுக்கும் (Maldives) ஜெனிபர் ஆர். லிட்டில் ஜோன் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |