நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது.
அந்தவகையில், நவம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும்.
குறித்த தகவலை மதுவரி திணைக்களத்தின் (Excise Department of Sri Lanka) ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறை
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 15ஆம் திகதி போயா தினமாக இருப்பதால், இவ்விரு நாட்களிலும் மதுபானசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் தினங்களில் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் செயற்படும் மதுபானசாலைகளுக்கு சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுத்தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், நிதி நிறுவன ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணையகம் (Election Commission) அறிவித்துள்ளது.
சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வாக்களிக்க உரிய விடுமுறை வழங்கப்படுவதில்லை என ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு பொதுத்தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், நிதி நிறுவன ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |