நாடு முழுவதுமுள்ள மதுபானசாலைகளுக்கு பூட்டு: வெளியான அறிவிப்பு
Sri Lankan Peoples
By Dhilak
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் 4ம் திகதி மூட வேண்டும் என கலால் ஆணையர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பின்னர், திங்கட்கிழமை 5ஆம் திகதி அனைத்து மதுபானசாலைகளும் திறக்கப்படும் என்று கலால் துணை ஆணையர் சி.ஜே.வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் விதிகளை மீறும் மதுபானசாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
விசேட வேலைத்திட்டம்
மேலும் அதன்போது, சட்டவிரோத மதுபான விற்பனையை சுற்றிவளைக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |