தமிழ் தலைமைகளுடனான பேச்சு நிறைவு - கோரிக்கைகளுக்கு இணங்கினார் ரணில்

Sri Lankan Tamils Ranil Wickremesinghe Ethnic Problem of Sri Lanka
By Vanan Dec 13, 2022 04:06 PM GMT
Report

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள், அதிகாரப் பகிர்வு, புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்ற தமிழ் தலைமைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும், அடுத்து ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னதாக இவை தொடர்பில் பேசி இறுதி தீர்மானம் எடுப்போம் எனும் முடிவோடு அதிபர் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.


அதிபருடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

இன்று நாங்கள் மூன்று விடயங்கள் குறித்து பேசினோம். முதலாவதாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, நில ஆக்கிரமிப்பு போன்ற விடயங்கள் குறித்து பேசினோம்.

இது தொடர்பில் உடனடியாக உரியவர்களுடன் பேசி, ஜனவரி மாசத்திற்குள் உரிய தீர்வை வழங்குவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதி அளித்திருக்கின்றார்.

ரணிலின் காலக்கெடு

தமிழ் தலைமைகளுடனான பேச்சு நிறைவு - கோரிக்கைகளுக்கு இணங்கினார் ரணில் | All Party Conference Ranil Final Decission

இரண்டாவதாக, ஏற்கனவே சட்டத்திலும் அரசியலமைப்பிலும் இருக்கின்ற அதிகார பகிர்வு சம்பந்தமான விடயங்களை எப்படியாக நடைமுறைப்படுத்துவது? மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பிலும் கருத்துக்களை முன் வைத்திருந்தோம்.

அதற்கு அதிபர் ஜனவரி மாத பேச்சின் போது அது தொடர்பான தீர்மானங்களை எடுக்கலாம் என்று பதில் கூறியிருக்கின்றார்.

மூன்றாவதாக, நீண்ட காலமாக இருக்கப் போகின்ற புதிய அரசியலமைப்பு சம்பந்தமான விடயங்களையும் எடுத்துக்கூறி இருந்தோம். அதிலே அதிகாரங்களை பகிர்வது உட்பட எல்லா விடயங்களையும் உள்ளடக்கியதாக நாங்கள் கோரிக்கைகளை முன் வைத்தோம்.

இதற்கு அதிபர் கூறிய பதில் “இதற்காக நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியது இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே பல அறிக்கைகள் இருக்கின்றன. இணக்கப்பாடுகள் இருக்கின்றன. வரைபுகள் கூட இருக்கின்றன. ஆகவே அவற்றை எல்லாம் சேர்த்து எப்படியான விதத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்பது குறித்து ஜனவரி மாதத்திலேயே நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

ஏனென்றால், அடுத்த வருடம் இடம்பெற இருக்கின்ற 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு முன்னதாக நாட்டிலே இன நல்லிணக்கம் ஏற்படுமா? இல்லையா? என்பது குறித்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று அவரே ஒரு காலக்கெடுவை வைத்திருக்கின்றார்.

இன நல்லிணக்கம்

தமிழ் தலைமைகளுடனான பேச்சு நிறைவு - கோரிக்கைகளுக்கு இணங்கினார் ரணில் | All Party Conference Ranil Final Decission

ஆகவே ஜனவரி மாதத்தில் இடம்பெற இருக்கின்ற அந்தப் பேச்சு வார்த்தையில் இருந்து நாட்டிலே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா? அல்லது முடியாதா என்று ஒரு முடிவுக்கு வரலாம்.

பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னதாக தான் இது குறித்த முடிவை அறிவிக்க வேண்டும் என அதிபர் எம்மிடம் கூறி இருக்கின்றார்.

ஆகவே மிகவும் குறைந்த காலகட்டமாக இருந்தாலும் அந்தக் காலகட்டத்தினுள் இந்த விடயங்கள் சம்பந்தமாக பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு அனைவரும் முயற்சி எடுப்போம் என்று கூறி இருக்கின்றோம்” என்றார். 

அதிபருடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்,

தமிழ் தலைமைகளுடனான பேச்சு நிறைவு - கோரிக்கைகளுக்கு இணங்கினார் ரணில் | All Party Conference Ranil Final Decission

குறிப்பாக இந்த நாட்டிலே பொதுவான ஒரு இணக்கப்பாடு இருக்கின்றது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவர்கள் மத்தியிலே பெரும்பாலான இணக்கப்பாடு இருக்கிறது. அவையே சிறந்த இணக்கப்பாடு.

பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னதாக தீர்வு தருவதாக அதிபர் கூறியிருக்கின்றார். அதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றது. ஆகவே புதிய விடயங்களை இப்பொழுது பேச முடியாது.

இதற்கு ஒரே முடிவு 13ஆவது திருத்தம் தான். அது முழுமையான தீர்வு அல்ல. ஆனாலும், அதில் இருந்து ஆரம்பிப்போம். அதிலிருந்து ஆரம்பித்து உங்களுடைய நேர்மையை காட்டுங்கள் என்று அதிபரிம் கூறி இருக்கிறேன்” என்றார்.

அதிபருடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன்

தமிழ் தலைமைகளுடனான பேச்சு நிறைவு - கோரிக்கைகளுக்கு இணங்கினார் ரணில் | All Party Conference Ranil Final Decission

“பல தமிழ் கட்சிகளினுடைய தலைவர்கள், சிங்கள - முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் என எல்லோரும் இந்த கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்தோம்.

அதிபர் 75ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப் பிரச்சினைகளை தீர்ப்பது சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதனை எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் எங்களிடம் அதிபர் கேட்டிருந்தார்.

நாம் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, நில அபகரிப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளை எடுத்துக் கூறினோம்.

வடக்கு கிழக்கிலிருக்கும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை உடனே தீர்க்க வேண்டும் என்பது எமது முதலாவது கோரிக்கையாக இருந்தது.

இரண்டாவது சட்டத்தின் வாயிலாக ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை நாங்கள் பெறக்கூடிய விதத்தில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதாவது 13ஆவது திருத்தச் சட்ட நடைமுறை, அதற்கமைவான மாகாண சபைகள் இயக்கம்.

அடுத்ததாக இதுவரை காலமும் பலவிதமான ஆவணங்களை நாம் தயாரித்திருக்கின்றோம். தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை தீர்ப்பது சம்பந்தமாக - எவ்வாறு அவற்றை முன்வைத்து அவற்றைப் படித்து பார்த்து, எவ்வாறான ஒரு தீர்வை அரசியல் யாப்பு மூலம் கொண்டு வரலாம் என்பது சம்பந்தமாகவும் நாங்கள் பேசி ஒரு முடிவுக்கு வரலாமா என்பது தொடர்பாகவும் ஒரு ஒரு தீர்வுக்கு வந்திருக்கின்றோம்.

அந்த அடிப்படையிலே நாங்கள் இந்த மூன்று விடயங்களையும் சம நேரத்தில் பரிசீலிக்க இருக்கின்றோம். அதற்கு அரசாங்கம் சரி என்று கூறி இருக்கிறது” என்றார்.

இன்றைய கலந்துரையாடலில் சிங்கள முஸ்லிம் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கலந்துக்கொண்ட போதிலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரித்திருந்தது.



ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015