ரணிலின் சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை ஏற்குமா கூட்டமைப்பு..! வெளியான தகவல்
TNA
Ranil Wickremesinghe
Selvam Adaikkalanathan
Sri Lanka All Party Government
By Kanna
தமிழ் தேசிய கூட்டமைப்பானது சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை ஏற்குமா என செல்வம் அடைக்கலநாதனை பிரத்தியேகமாக தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
இதேவேளை, கூட்டமைப்பு சர்வகட்சி அரசில் அமைச்சு பதவிகளை ஏற்கும் என தவறான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரணிலுக்கு கடிதம் அனுப்பிய சம்பந்தன்
அதிபர் ரணில் விக்ரமசிங்க தமலையில் அமையவுள்ள சர்வகட்சி அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை நேற்று அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், சர்வகட்சி அரசில் கூட்டமைப்பு அமைச்சு பதவிகளை ஏற்குமா இல்லையா என்ற கேள்வி அரசியல் அவதானிகள் பலரால் விவாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
