கிரேக்கத்தில் பணம் - ஜனாதிபதிக்கு எதிரான பகிரங்க குற்றச்சாட்டு: சர்ச்சையில் சிக்கிய நபர்!
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பிரதி இயக்குநர் துசித ஹல்லொலுவ, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) எதிராக வெளியிட்ட கருத்து ஒன்றுக்கான விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ஜனாதிபதி கிரேக்கத்தில் மூதலீடு ஒன்றை செய்துள்ளதாக துசித ஹல்லொலுவ சமீபத்தில் தெரிவித்த கருத்து தொடர்பான விசாரணைக்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (15) அழைக்கப்பட்டுள்ளார்.
முறைப்பாடு
அண்மையில் இது குறித்த முறைப்பாடானது, சட்டத்தரணி அகலங்க உக்வத்தே மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆகியோரால் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது.
அதன்போது, சந்தேகத்துக்குரிய கருத்து, ஜனாதிபதி அநுரவின் நற்பெயருக்கு கடுமையான பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சமூக ஊடகங்கள் மூலம் அந்தக் கருத்தைப் பரப்பிய துசித ஹல்லொலுவ மற்றும் சமூக ஊடக நிர்வாகிகள் மீது அவசர விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
