மன்னாரில் சாலையில் சீரழியும் பல கோடி பெறுமதியான பேரூந்துகள் !
மன்னார் போக்குவரத்து சாலையில் பல கோடி ரூபாய் பெறுமதியான பேரூந்துகள் உரிய பராமறிப்பின்றி காணப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
மன்னார் இலங்கை பொது போக்குவரத்து சாலையின் அவல நிலை தொடர்பில் ஆராய்வதற்கான கண்கானிப்பு வியஜம் ஒன்றை இலங்கை பொது போக்குவரத்து சபையின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகதீஸ்வரன் மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயடம், இன்றையதினம் (30) காலை இடம்பெற்றுள்ளது.
பிரதான வீதி
இதன் போது தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் போக்குவரத்து சாலையில் பல கோடி ரூபா பெறுமதியான பேரூந்துகள் உரிய பராமறிப்பின்றி மன்னார் போக்குவரத்து சாலையில் நிறுத்தப்பட்டு கவனிப்பின்றி கரல் கட்டிய நிலையில் காணப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் பல வருடங்களாக கொள்வனவு செய்யப்படாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மன்னார் போக்குவரத்து சாலையினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் இருந்து பல தூர பகுதிகளுக்கான சேவை நீண்டகாலங்களாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போதும் கொழும்பு கண்டி போன்ற தூர பகுதிகளுக்கு மிகவும் பழுதடைந்த போரூந்துகளையே மன்னார் போக்குவரத்து சாலை பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழுதடைந்துள்ள பேரூந்து
இவ்வாறான நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் கண்காணிப்பு விஜயத்தின் பின் கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் பொது போக்குவரத்து சாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் விரைவில் அவற்றை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் பழுதடைந்துள்ள பேரூந்துகளை மீள்பயண்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான உதிரிபாகங்கள் விரைவில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள உள்ளதாகவும் அவற்றில் ஐந்து திருத்தப்பட்ட இஞ்சின்கள் விரைவில் மன்னார் போக்குவரத்து சாலைக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து சாலை
அத்தோடு, மன்னார் மற்றும் முல்லைத்தீவு பொது போக்குவரத்து சாலைகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் பல கோடி பெறுமதியான அரச சொத்துக்கள் விரையம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நிலைக்கான காரணம் தொடர்பில் விரைவில் விசாரணைகள் மோற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னார் போக்குவரத்து சாலையின் இந்த நிலை தொடர்பிலும் மன்னார் போக்குவரத்து சாலையில் பயன்படுத்தப்படும் பேரூந்துகளின் நிலை தொடர்பிலும் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பிலும் பல வருடங்கள் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, கடந்த இரண்டு வருடங்கள் எந்த ஒரு உயர் அதிகாரிகளும் மன்னார் போக்குவரத்து சாலைக்கு விஜயம் மேற்கொண்டு மக்கள் முறைப்பாடுகள் தொடர்பாகவோ பேரூந்து சாலையின் நிலை தொடர்பாகவோ பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
