இலட்சக்கணக்கில் இலஞ்சம் : மாவட்ட பிரதம பொறியியலாளர் உட்பட இருவர் சிக்கினர்
Colombo
Hambantota
Bribery Commission Sri Lanka
By Sumithiran
ஒன்பது இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பிரதம பொறியியலாளர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் சாரதி ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (5) இரவு ஹம்பாந்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் அம்பலாந்தோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு இரவிரவாக விசாரணைகள் நடைபெற்றன.
இன்று நீதிமன்றில் முன்னிலை
இது தொடர்பில் அம்பலாந்தோட்டை காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சந்தேகநபர்கள் இருவரையும் இன்று (6) நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.

கொழும்பில் இருந்து சென்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குழுவினால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி