விஜயின் ஆட்சியை கவிழ்க்க திரைமறைவில் சதி ..! பின்னணியில் செந்தில்பாலாஜி; கோடிக் கணக்கில் பேரம்
தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசைக் கவிழ்க்க தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம், ஒரு முழுமையான அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது.
தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 2 பேர் உட்பட 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடங்கள் தெரிவிக்கின்றன.
குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்னும் முயற்சி செய்கின்றனர்' என அமைச்சர் நிர்மல் குமார் ஊடங்கள் முன் குற்றம்சாட்டி உள்ளார்.
நம்பிக்கையின்மை தீர்மானம்
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வென்று ஆட்சியை தக்க வைத்திருக்கும் நிலையில், அடுத்த ஆறு மாதத்திற்கு அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்க்கட்சிகள் கோரமுடியாது என்ற நிலை இருந்தது.

ஆனால், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையின்மை தீர்மானத்தை கொண்டுவர முடியும். சபாநாயகர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி ஏற்பட்டாலும் தவெக அரசு கவிழும்.
இப்படியான சூழலில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையின்மை தீர்மானத்தை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
திரைமறைவில் கோடிக் கணக்கில் பேரம்
அப்படி கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது தவெக எம்.எல்.ஏக்கள் எதிர்த்து வாக்களிக்க 15க்கு மேற்பட்டோர்களிடம் திரைமறைவில் கோடிக் கணக்கில் பேரம் பேசப்பட்டிருக்கிறது.

காவல்துறையின் அறிக்கையின் படி, ஒரு எம்.எல்.ஏவுக்கு 35 கோடி ரூபாய் என்று கூறப்பட்டிருக்கிறது. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கணக்குபடி 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ஆட்சியை கவிழ்ப்பதற்கான இந்த பேரத்தை பேசிய IPDS என்ற கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசை கைது செய்திருக்கிறது
தொடர் விசாரணை
திருநாவுக்கரசிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் முயற்சியின் பேரிலேயே திருநாவுக்கரசு எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேசியதாவும் கைது செய்யப்பட்ட மற்றொரு நபரான நரேஷை சென்னையில் வைத்து அசோக் சந்தித்து பேசியதாகவும் தெரியவந்ததையடுத்து, அசோக்கை தேடி கரூர் சென்றிருக்கிறது காவல்துறை.

ஆனால், அவர் தலைமறைவாகிவிட்ட சூழலில், கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
திமுகவிற்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆட்சியை கவிழ்ப்பதற்கான முயற்சியில் செந்தில்பாலாஜி தரப்பு தனியாக இறங்கியதா? அல்லது திமுக தலைமையின் சம்மதத்தின்பேரில் இது நடந்ததா? என விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்