செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய நிதி ஒதுக்கீடு : அதிபர் ரணில்
நாட்டில் டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குத் தேவையான நிறுவன கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகம் செய்யவும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
பசுமை பொருளாதாரம்
இன்றைய உலகம் செயற்கை நுண்ணறிவுடன் முன்னேறி வருகின்றது.
பசுமை பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது நோக்கம்.
அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட 08 பில்லியன் தொகையை செலவழிக்க தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க கவுன்சில் என்ற பெயரில் ஒரு நிறுவனம் நிறுவப்படும்.
தொழில் நுட்பத்தை வணிக ரீதியாக பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஒதுக்கப்பட்ட 08 பில்லியன் ரூபாவை ஒவ்வொரு துறையினதும் அபிவிருத்திக்காக பயன்படுத்துவதற்கு அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன் மூலம், டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுத்துச் செல்ல டிஜிட்டல் முகவர்நிலையத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |