அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கொடுப்பனவு : வெளியான அதிர்ச்சி தகவல்
மன்னாரில் (Mannar) பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அலுவலக கொடுப்பனவுகள் வழங்கப்படாமை குறித்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அலுவலக கொடுப்பனவுகள், மாதம் 75% சுமார் 21 கோடி ரூபாய் கடந்த 2013 தொடக்கம் 2025 வரை வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டமை தொடர்பில் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பல்வேறு பிரச்சினை
கலந்துரையாடலையடுத்து, பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
அவற்றில், இதுவரை வழங்கப்படாத பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகளுக்கான அலுவலகக் கொடுப்பனவு 2025 மார்ச் மாதம் முதல், ஜனவரி - பெப்ரவரி மாதங்களுக்கான நிலுவை தொகையுடன் வழங்குவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது.
அலுவலகக் கொடுப்பனவு
பணிக் கட்டுப்பாட்டு பிரச்சினைகள், உள்ளக இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகள், அலுவலகப் பொருட்கள் கிடைக்காதமை, பணிச்சுமை அதிகரித்த பகுதிகளில் கடமையில் அமர்த்துதல் மற்றும் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களை பதிவிடல் போன்ற பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு தீர்வுகள் எடுக்கப்பட்டன.
இந்த கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலாளர் மற்றும் கணக்காளர் உட்பட அதிகாரமுடைய அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
