14 படகுகளில் அபாயகர பயணம்! பிரித்தானியாவிற்குள் நுழைந்த 700 குடியேறிகள்
United Nations
Immigration
France
By Vanan
14 சிறிய படகுகளில் ஏறக்குறைய 700 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ளனர்.
இந்த வருடத்தின் புதிய சாதனையாக இது நேற்று திங்கட்கிழமை(1) பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 651 என்ற புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை பதிவாகியிருந்த நிலையில், நேற்று 696 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒரே நாளில் கால்வாயைக் கடந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2022 ஆம் ஆண்டில் இதுவரை 17 ஆயிரம் பேர் சிறிய படகுகளில் பிரான்சில் இருந்து பிரித்தானியாவிற்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
You May Like This
