அதிவேக தொடருந்தில் மோதி இளம் யுவதி உயிரிழப்பு
Kalutara
Sri Lanka
Accident
By Raghav
அளுத்கமவில் (Aluthgama) இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த அதிவேக தொடருந்தில் மோதி யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவமானது களுத்துறை (Kalutara), வேலபுர வித்தியாலயத்திற்கு பின்புற பகுதியில் நேற்றையதினம் (29.10.2024) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
பயாகல - கல்லனமுல்ல பகுதியைச் சேர்ந்த டோனா இஸ்ஷினி சிதாரா என்ற 23 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தொடருந்து பாதைக்கு அருகில் நின்று கொண்டு தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மாலதியைப் போன்ற மகத்துவமான பெண்கள் சாதனை செய்த தேசம்!
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்