நாட்டை தவறாக வழிநடத்தாதீர் - அமைச்சர் மஹிந்தானந்த கோரிக்கை
sri-lanka
parliament
organization
youthcommunity
By Vasanth
தவறான கருத்துக்களை முன்னெடுத்து நாட்டை தவறாக வழிநடத்த வேண்டாம் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் கருத்துரைத்த போதே இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கறுப்பு பட்டி அணியும் எதிர்கட்சியினர், அரசியல் யாப்பிற்கு உட்பட்ட நாடாளுமன்றத்தில் இருப்பது கவலைக்குரிய நிலையாகும் .
நீதிபதிகள் மோசடிகாரர்கள் என்று கூறிய ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஆதரவாக எதிர்கட்சி குரல் கொடுத்து வருகின்றது.
கொவிட் நிவாரணங்களை வழங்குவதற்காக 60இற்கும் அதிகமான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுபற்றி எதிர்கட்சித் தலைவர் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றார்.


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !
2 வாரங்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி