யாழில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
Jaffna
Jaffna Teaching Hospital
By Sumithiran
யாழ்ப்பாணம்(jaffna) - கோப்பாய் பகுதியில் உருக்குலைந்த நிலையில் வயோதிப பெண் ஒருவரது சடலம் இன்றையதினம்(23) மீட்கப்பட்டது.
கோப்பாய் - கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த பிரவுண்ராசா நாகேஸ்வரி (வயது 78) என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வீட்டு கிணற்றடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த பெண்ணின் கணவர் உயிரிழந்த நிலையில் தனது சகோதரனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்றையதினம் உருக்குலைந்த நிலையில் அவரது வீட்டு கிணற்றடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !
2 வாரங்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி