அமேசான் நிறுவனத்தின் அதிரடி பணிநீக்கம் - அதிருப்தியில் ஊழியர்கள்
சமீபத்திய காலங்களில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில்,தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் பணி நீக்கம் செய்து வருகின்றன
இதற்கமைய அமேசான் நிறுவனம் 10,000 பேரை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
இது மெட்டா மற்றும் டுவிட்டர் நிறுவனங்களின் மெகா பணி நீக்கத்திற்கு பிறகு, ஜெப் பெசோஸ்(Jeff Bezos) தலைமையிலான அமேசான் நிறுவனமும் பணி நீக்கம் செய்திருந்தது.
மிகப்பெரிய பணி நீக்கம்
தொழில்நுட்ப ஜாம்பவான்களின் இந்த அறிவிப்பானது ஊழியர்கள் மத்தியில், இது பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியது
எனினும் வரும் மாதங்களில் சுமார் 20,000 ஊழியர்களுக்கு pink color sleep கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொழில்நுட்ப ஊழியர்கள், முக்கிய உயர் அதிகாரிகள் என பலரும் இதில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
மேலும், மெட்டா மற்றும் டுவிட்டர் நிறுவனங்களை போல மிகப்பெரிய பணி நீக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
1.5 மில்லியன் பணியாளர்கள்
கடந்த சில நாட்களாக நிறுவன உயர் அதிகாரிகள் மத்தியில், ஊழியர்களிடையே பணி செயல்திறன் குறித்து, அடையாளம் காணுமாறு கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமேசான் 20,000 ஊழியர்களை குறைத்தால், அதன் கீழ்மட்ட ஊழியர்களில் சுமார் 6% குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசானில் தற்போது உலகம் முழுதும் சுமார் 1.5 மில்லியன் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பணி நீக்க நடவடிக்கையில் ஊழியர்களுக்கு 24 மணி நேர அறிவிப்பு மற்றும் பணி நீக்க ஊதியம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிய நிலையில் “இந்த பணி நீக்கம் என்பது குறிப்பிட்ட துறைகளில் இல்லை. அது அனைத்து துறைகளிலும் இருக்கலாம்“ என ஒரு தரப்பு தெரிவித்துள்ளது.
VRS திட்டம்
கொரோனா காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் இந்த மிகப்பெரிய பணி நீக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது செலவீனத்தை குறைக்கும் திட்டமாக இருக்களாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஏற்கனவே அமேசான் நிறுவனத்தில் இருந்து தாமாகவே வெளியேறும் ஊழியர்களுக்கான VRS திட்டத்தினையும் அறிவித்தது.
இந்த முடிவுகள் 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களுடன் பகிரப்படும். நிறுவனத்தின் ஒவ்வொரு தலைவரும் அந்தந்த அணிகளுக்குத் தகவல் தெரிவிக்கும்போது நாங்கள் விவரங்களை கூறுவோம் என அறிவித்துள்ளது.