ஈரான் தூதுவர் அநுரவுக்கு வழங்கிய வாக்குறுதி!
இலங்கையின் வர்த்தகம், தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளின் புதிய வேலைத்திட்டங்களுக்கு உதவிகளை வழங்க தயார் என ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேஷா டெல்கோஷ் (Dr. Alireza Delkhosh) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(25) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஈரான் – இலங்கை தொடர்பு
இதன்போது, தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு வரும் சுற்றுலா பிரயாணிகளினதும் பொது மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், நாட்டுக்குள் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த அர்ப்பணிப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும், ஈரான் – இலங்கை தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்வதே தனது நோக்கம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |