கடன் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஜப்பான்
இலங்கையின் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோசி ஹிடேக்கி வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை பொருளாதாரத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடி தன்மையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து ஹிடேக்கி மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியானது அதன் கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு விரிவான அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
கடன் மறுசீரமைப்பு
எனினும், பாரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்காத சீனா மற்றும் இந்தியா போன்ற பாரிய கடன் வழங்கும் நாடுகளுடனான கடன் மறுசீரமைப்புக்கு போதுமான வழிகள் இருக்கவில்லை.
இதனையடுத்து, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, பிரான்ஸ் மற்றும் இந்தியாவுடன் இணைந்து ஜப்பான் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவை ஆரம்பிக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுத்தது.
ஜப்பானின் இந்த ஈடுபாடு காரணமாக பேச்சுவார்த்தைகளை எளிதாக்குதல் மற்றும் முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பான உடன்படிக்கை கடந்த நவம்பர் மாதம் எட்டப்பட்டது.
மேலும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முன்முயற்சிகளுக்கு ஆதரவளிப்பக்க ஜப்பான் உறுதி கொண்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |