அரச நிறுவனமொன்றில் பாரிய எரிபொருள் மோசடி - ஊழியர்கள் கட்டாய விடுப்பில்
பாரிய எரிபொருள் மோசடி
மில்கோ நிறுவனத்திற்கு சொந்தமான அம்பேவெல தொழிற்சாலையில் பாரிய எரிபொருள் மோசடியில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களையும் கட்டாய விடுமுறையில் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மில்கோ நிறுவனத்தில் இருந்து 45,000 லீற்றருக்கும் அதிகமான டீசல் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் கட்டாய விடுப்பில்
மேலும் இந்த டீசல் மோசடி தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனைத்து ஊழியர்களும் விசாரணை முடியும் வரை கட்டாய விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் எனவும் விவசாய அமைச்சரிடம் ரேணுகா பெரேரா அறிவித்துள்ளார்.
இந்த வருடமும் இந்த எரிபொருள் மோசடி இடம்பெற்றுள்ளதா என்பதை ஆராயுமாறு விவசாய அமைச்சர் மில்கோ தலைவருக்கு பணிப்புரை விடுத்தார்.