கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மற்றுமொரு சொகுசு கப்பல்
Colombo
Sri Lanka
Thailand
Maldives
By Sathangani
தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து எம்பியன்ஸ் என்ற சொகுசு ரக கப்பல் இன்று (18)காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
1,131 பயணிகள் மற்றும் 565 பணியாளர்களுடன் குறித்த கப்பல் நாட்டுக்கு வருகை தந்துள்ளது.
அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா மற்றும் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பயணிகள் குறித்த கப்பலில் வருகை தந்துள்ளனர்.
மாலைதீவிற்கு புறப்படவுள்ளது
இதேவேளை குறித்த கப்பலில் வருகை தந்த பயணிகள் கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு செல்லவுள்ளனர்.
இந்த கப்பல் இன்று இரவு மாலைதீவு நோக்கி புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி