துண்டு துண்டாக வெட்டுவேன்: பௌத்த பிக்குவிற்கு தக்க பதிலடி கொடுத்த சாணக்கியன் (காணொளி)
தமிழ் மக்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என தெரிவித்த அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், மட்டக்களப்பில் இருக்கும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் எனது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் வகையில் செயற்பட்டுள்ளார்.
தேரருக்கு எதிராக நடவடிக்கை
கடந்த ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கட்டளையை காவல்துறையினர் நடைமுறைப்படுத்தவில்லை.
அந்த விடயத்தை இந்த தேரர் வேறு வகையில் திரிபுப்படுத்தி நான் நாடாளுமன்றத்தில் பேசும் போது என்னை தடுக்க அங்கு முதுகெலும்புள்ள சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரும் இல்லையா என்று எனது சிறப்புரிமையை மீறும் வகையிலான ஓர் காணொளியினை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் கிழக்கில் வசிக்கும் தமிழர்கள் ஒவ்வெருவரையும் துண்டு துண்டாக வெட்டுவேன் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.
இவ்வாறாக என்னையும் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் இந்த பௌத்த பிக்குவுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.