கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகளை கொண்டு சென்ற அம்பியூலன்ஸ் விபத்து
accident
corona
sri lanka
By Shalini
கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகளை கொண்டு சென்ற அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று விபத்திற்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்து கெஸ்பேவ பகுதியில் வைத்து இன்று விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையினால் அம்பியூலன்ஸ் வண்டி வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்