இலங்கையின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்தில் திருத்தங்கள் அவசியம்: சர்வதேச அமைப்பு வலியுறுத்தல்

Sri Lanka Political Development
By Pavi Oct 30, 2026 01:09 AM GMT
Report

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA), சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழான நாட்டின் கடப்பாடுகளுக்கு முழுமையாக இணங்கும் வகையில் திருத்தப்பட வேண்டும் என சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு (OMCT) வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் (PTA) பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலம் தொடர்பில், குறித்த அமைப்பு சட்டரீதியான ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 2026 ஒக்டோபர் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம், நீண்டகாலத் தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் ஏனைய மனிதாபிமானமற்ற நடத்தைகளுக்கு வழிவகுப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பொறிமுறைகளால் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ளது.

எரிவாயு விநியோகத்தில் தடை: லாஃப்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்

எரிவாயு விநியோகத்தில் தடை: லாஃப்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்

சட்டபூர்வமான கருத்து 

புதிய சட்டமூலத்தில் தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான முன்மொழிவையும், சில பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வரவேற்றுள்ள OMCT, அதேவேளை அதில் குறிப்பிடத்தக்க கரிசனைகள் தொடர்ந்தும் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்தில் திருத்தங்கள் அவசியம்: சர்வதேச அமைப்பு வலியுறுத்தல் | Amendments Are Necessary To Sri Lanka S New Pta

குறிப்பாக, பயங்கரவாதம் தொடர்பான பரந்துபட்ட வரைவிலக்கணங்களும் தெளிவற்ற குற்றப் பிரிவுகளும் அமைதியான போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள், இணையவழிச் செயற்பாடுகள் மற்றும் சட்டபூர்வமான கருத்து வெளிப்பாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

மேலும், தனிநபர்களைக் கைது செய்து தடுத்து வைப்பதற்கும், அமைப்புகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கும் வழங்கப்பட்டுள்ள விரிவான அதிகாரங்கள், தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதை, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குதல் போன்ற அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனால், இலங்கையில் சிவில் சமூகச் செயற்பாடுகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

OMCT கோரிக்கை 

எனவே, பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களைத் தெளிவானதும் குறுகிய வரையறைக்குட்பட்டதுமான வகையில் வரையறுத்தல், தடுப்புக்காவல் நடவடிக்கைகள் மீது பயனுள்ள நீதித்துறை கண்காணிப்பை உறுதிப்படுத்துதல், தடுப்புக்காவலின் ஆரம்பத்திலிருந்தே சித்திரவதைக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை உறுதிப்படுத்துமாறு OMCT கோரியுள்ளது.

இலங்கையின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்தில் திருத்தங்கள் அவசியம்: சர்வதேச அமைப்பு வலியுறுத்தல் | Amendments Are Necessary To Sri Lanka S New Pta

அத்துடன், நியாயமான விசாரணைக்கான உரிமை, பாகுபாடின்மை மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாப்பதற்கான உத்தரவாதங்களையும் வலுப்படுத்த வேண்டும் என இலங்கை அதிகாரிகளிடம் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான சட்டங்கள் சிவில் சமூகச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது சட்டபூர்வமான கருத்து வேறுபாடுகளைக் குற்றமாக்குவதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது என்றும் OMCT தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதும் மனித உரிமைகளை நிலைநாட்டுவதும் ஒன்றுக்கொன்று முரணான இலக்குகள் அல்ல மாறாக, இவை இரண்டும் சமமாக நிறைவேற்றப்பட வேண்டிய கடப்பாடுகள் என்றும் சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எரிபொருள் விலை உயர்வால் கம்போடியாவில் முடங்கிய சொகுசுக் கப்பல்: 203 பயணிகள் பாதிப்பு

எரிபொருள் விலை உயர்வால் கம்போடியாவில் முடங்கிய சொகுசுக் கப்பல்: 203 பயணிகள் பாதிப்பு

A9 வீதியில் பேருந்தில் பயணித்த பெண் திடீர் மரணம்

A9 வீதியில் பேருந்தில் பயணித்த பெண் திடீர் மரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி