குடிசார் பிரதிநிதிகளை சந்தித்த ஜுலி சங் : மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் பேச்சு!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் குடிசார் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
இதன்போது, இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டதாக ஜுலி சங் தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைக்கு தீர்வு
அத்துடன், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மேற்கொள்ளப்படும் அவர்களது தொடர்ச்சியான முயற்சிகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Today I met with several members of Sri Lanka’s civil society to discuss pressing issues and their continued efforts to safeguard human rights in Sri Lanka. The United States values the expertise and dedication of civil society, who drive positive changes & help foster thriving… pic.twitter.com/f0iAfBDtfa
— Ambassador Julie Chung (@USAmbSL) January 16, 2024
குடிசார் சமூகத்தின் நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அமெரிக்கா மதிப்பதாக இந்த சந்திப்பின் போது ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
செழிப்பான சமூகம்
மேலும், குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேர்மறையான மாற்றங்களைத் தூண்டுவதாகவும் செழிப்பான சமூகங்களை வளர்க்க உதவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |