அத்துமீறும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்: களமிறங்கிய அமெரிக்க கடற்படை
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வர்த்தக கப்பல்கள் மீது நடத்தும் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச கடற்படை நடவடிக்கையை தொடங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கடலில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து எண்ணெய் மற்றும் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மார்ஸ்க் மற்றும் எம்.எஸ்.சி. நிறுவனங்கள் ஏற்கனவே செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்தை நிறுத்திவிட்டன.
அமெரிக்காவின் தீர்மானம்
மேலும், கப்பல்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிச் சென்று தென்னாப்பிரிக்காவின் முணை வழியாக அட்லாண்டிக்கிற்குள் நுழைவதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு கண்டங்களை சுற்றிச் செல்லவதால் அதிக செலவுகள் ஏற்படுவதுடன் நீண்ட காலமும் எடுக்கும் என்பதால் பாதிப்புகளை குறைக்கும் வகையில் கப்பல்களை பாதுகாக்க சர்வதேச கடற்படை நடவடிக்கையை தொடங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
குறுகிய கப்பல் பாதை
அதேவேளை, அமெரிக்காவின் இந்த தீர்மானத்தில் இணைவதற்கு பிரிட்டன், கனடா, பிரான்ஸ், பஹ்ரைன், நோர்வே, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான குறுகிய கப்பல் பாதை செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் ஆகும், உலகின் சுமார் 15 சதவீத வர்த்தகம் இதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |