போர் தேசத்திற்கு செல்லும் இலங்கையர்கள்
இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குழு இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளது.
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இது தொடர்பான விமான பயணசீட்டுக்களை வழங்கி வைத்துள்ளார்.
30 பேர் கொண்ட முதல் குழுவில் 10 பேர் நேற்றிரவு நாட்டை விட்டு வெளியேறியதாகவும், மற்றைய 20 பேர் கொண்ட குழு இன்று (19) இஸ்ரேல் செல்லவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் விவசாயத் துறை
மேலும், சில வாரங்களில் இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணியாற்ற 10,000 தொழிலாளர்கள் அனுப்பப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இது தொடர்பில் ஏற்கனவே இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் மோஷே ஆர்பெல் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார ஆகியோர் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்தி இருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |